Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜபக்‌ஷக்கள் தொடர்பில் அமைச்சர் சந்திம தகவல் வெளியிட்டார்

In இலங்கை
Updated: 11:11 GMT, Nov 30, 2016 | Published: 11:11 GMT, Nov 30, 2016 |
0 Comments
1648
This post was written by : hoshika

மஹிந்தரின் குடும்பத்தினர் ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிளவு படுத்த மாட்டார்கள் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரகொடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஷில் தவிர்ந்த ராஜபக்‌ஷக்கள் கௌரவப்படுத்தப்பட்டது மக்களுடைய அன்பை பெற்றுக்கொண்டது ஏன்? எப்படி? ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஊடாகவே என குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு அதன் மூலமாகவே மக்களின் அன்பை பெற்றுக்கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்.

மஹிந்த உட்பட நாமல் ராஜபக்‌ஷ, ஷமல் ராஜபக்‌ஷ ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தீமை ஏற்படும் வகையில் நடந்து கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை என கூறினார்.

இவர்கள் மக்கள் மத்தியில் சேவை செய்வதற்கும் மக்களின் பிரதிநிதியானமைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே சந்தர்ப்பம் வழங்கியது எனவே பஷில் தவிர்ந்த ராஜபக்‌ஷக்கள் யாரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு பங்கம் விளைவிக்க மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg