Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2.0 படப்பிடிப்புத் தளத்தில் சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த விஜய்!

In சினிமா
Updated: 10:20 GMT, Nov 30, 2016 | Published: 10:20 GMT, Nov 30, 2016 |
0 Comments
1612
This post was written by : Varothayan

இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் நடந்துவந்த நிலையில் அதே இடத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று விஜய், ரஜினியை சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபாடியாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னனாக இருப்பவர் விஜய். இவர் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இதே இடத்தில் நடந்த ரஜினியின் 2.0 படப்பிடிப்புக்கு சென்ற விஜய் படக்குழுவினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியுடன் சில நிமிடங்கள் பேசிய விஜய், 2.0 படத்தின் மேக்கப்பில் ரஜினி இருந்ததால் அவருடன் எந்த புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘பைரவா’ படத்தை வரும் ஜனவரி பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg