Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தாலிக்கு தங்கம்’ திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. ஆராய வேண்டும்: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 10:42 GMT, Nov 30, 2016 | Published: 10:42 GMT, Nov 30, 2016 |
0 Comments
1248
This post was written by : Varothayan

தமிழக அரசின் ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வாரஇதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், இந்த திட்டத்திற்காக சந்தை மதிப்பை விட அதிக விலை கொடுத்து தங்கம் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு தங்க நாணயத்திற்கு ரூ.506-ல் இருந்து ரூ.3,467 வரை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிராமுக்கு ரூ.1,303-ல் இருந்து ரூ.2,362 வரை அதிக விலை கொடுத்து தங்கம் வாங்கியதன் மர்மம் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.111 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg