Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க விசேட ஏற்பாடு

In இந்தியா
Updated: 11:13 GMT, Nov 30, 2016 | Published: 11:13 GMT, Nov 30, 2016 |
0 Comments
1186
This post was written by : Varothayan

சபரிமலையில் பிளாஸ்டிக் போத்தல் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் துணிப்பைகள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சபரி மலைக்கும், தற்போதுள்ள சபரிமலைக்கும் பல்வேறு கட்டமைப்பு வேறுபாடுகள் உள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு புன்னிய பூங்காவனம் என்ற ஒரு திட்டத்தின் கீழ் இந்த புண்ணிய பூமியை தூய்மைப்படுத்தவும், சுற்று சூழலுக்கு ஏற்றவாறு இதனை பக்தர்கள் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக இந்த ஆண்டு சபரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் போத்தல்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் தங்கும் விடுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் கொடுப்பதற்கு மாற்றாக வேறு முறையில் தண்ணீர் கொடுத்தால் நலமாக இருக்கும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg