Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் உயர்மட்ட ஆலோசகர் ஆல்பர்ட்டா விஜயம்

In கனடா
Updated: 11:01 GMT, Nov 30, 2016 | Published: 11:00 GMT, Nov 30, 2016 |
0 Comments
1092
This post was written by : Risha

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் உயர்மட்ட ஆலோசகர் Kellyanne Conway எதிர்வரும் ஜனவரி மாதம் கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அங்கு கல்கரியில் தனியார் நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்படவுள்ள நிதி திரட்டும் நிகழ்வொன்றில் அவர் ஜனவரி 12ஆம் திகதி கலந்துக் கொண்டு உரையாற்ற உள்ளார்.

அதனை தொடர்ந்து இடம்பெறும் இரவு விருந்துபசாரத்திலும் அவர் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சுமார் 300 மாகாண சபை மற்றும் வர்த்தக தலைவர்களும் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையிலான பரஸ்பர கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன்போது, அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் இணைந்து செயற்படல், இருதரப்பு உறவை வலுப்படுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல் ஆகியன தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg