Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொரோக்கோவைச் சேர்ந்த இருவர் ஸ்பெய்னில் கைது

In ஐரோப்பா
Updated: 11:12 GMT, Nov 30, 2016 | Published: 11:12 GMT, Nov 30, 2016 |
0 Comments
1223
This post was written by : Elakkiya

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மொரோக்கோவைச் சேர்ந்த இருவர் ஸ்பெய்னில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெய்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு குறித்து பிரசாரம் மேற்கொள்வதில் முக்கியமானவர் என்று ஸ்பெய்ன் உட்துறை அமைச்சு இன்று (புதன்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட்டின் புறநகர் பகுதியில் வசித்து வருவதாகவும் பொதுமக்களை தாக்குவதற்கு தனிநபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இணையத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்பவர் என்றும் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் ஆட்களை சேர்க்கும் வகையில் பரவலாக பிரசாரம் மேற்கொள்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றையவர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்கு முயன்றபோது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ள ஸ்பெய்ன் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் இதுவரை 170 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg