Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுடனான உறவை பலப்படுத்துவது குறித்து ஜெஸ்டின் பேச்சு

In கனடா
Updated: 11:18 GMT, Nov 30, 2016 | Published: 11:17 GMT, Nov 30, 2016 |
0 Comments
1116
This post was written by : Risha

அமெரிக்காவிற்கும்- கனடாவிற்கும் இடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பில் அமெரிக்க துணை ஜனாதிபதிக்கும், கனடிய பிரதமருக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ஜெஸ்டின் ரூடோவிற்கும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென்- இற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரமளவில் இடம்பெறவுள்ளது. இதன்போதே இருதரப்பு உறவு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளும் வகையில், துணை ஜனாதிபதி எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தினங்களில் ஒட்டாவாவில் தங்கியிருப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

மேற்படி சந்திப்பின் போது இரு தரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பிலும், பல சர்வதேச பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg