Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுடன் எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் இல்லை: ரஷ்யா

In ஐரோப்பா
Updated: 11:44 GMT, Nov 30, 2016 | Published: 11:42 GMT, Nov 30, 2016 |
0 Comments
1242
This post was written by : Elakkiya
201611300505318620_no-secret-talks-with-pakistan-on-cpec-russia_secvpf

சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார இடைவழித் திட்டம் குறித்து பாகிஸ்தானுடன் எவ்வித இரகசிய பேச்சுவார்த்தையும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சீனா பாகிஸ்தான் இடையிலான சி.பி.இ.சி எனப்படும் பொருளாதார இடைவழித் திட்டம் சுமார் 51 பில்லியன் டொலர் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறிருக்க இத்திட்டம் குறித்து பாகிஸ்தானுடன் ரஷ்யா இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழிப்பாதை திட்டத்தில் ரஷ்யா பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உடனான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கள் தகுந்த மதிப்புடன் இருந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg