Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடர் அமளி: 10ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

In இந்தியா
Updated: 11:49 GMT, Nov 30, 2016 | Published: 11:49 GMT, Nov 30, 2016 |
0 Comments
1237
This post was written by : Varothayan

500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாத விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் 10 ஆவது நாளாக இன்றும் இந்திய நாடாளுமன்றம் முடங்கியது.

குறித்த பிரச்சனையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 9 நாள் முடக்கத்திற்கு பின் இன்று மக்களவை கூடியதும் நக்ரோட்டா தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்தன.

இது பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததை அடுத்து அவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ரூபாய் தாள்கள் தடை விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்றும், ஆனால் எதிர்கட்சிகள் தான் அதற்கு தயார் இல்லை என்றும் கூறினார்.

பின்னர் அவைக்கு வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வலியுறுத்தினர். எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் அனந்த குமார், ரூபாய் தாள்கள் விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் தேவையில்லை என்றார்.

இதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். விவாதம் எந்த விதியில் நடத்துவது என்பது குறித்த அமளி நீடித்ததால் 2-வது முறையாக 12.45 மணி வரை சுமித்ரா மகாஜன் அவையை ஒத்திவைத்தார். இந்நிலையில் அவை மீண்டும் கூடியதும் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களைவையும் நக்ரோட்டா தீவிரவாத தாக்குதல் விவகாரம் புயலை கிளப்பியது. இதனால் அவை மதியம் 2 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2 மணிக்கு தொடங்கிய போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg