Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வைத்தியர்கள் போராட்டம்: மக்கள் சிரமம்

In
Updated: 11:40 GMT, Nov 30, 2016 | Published: 11:40 GMT, Nov 30, 2016 |
0 Comments
1271
This post was written by : hoshika

புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதன் காரணமாக நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று  (புதன்கிழமை) காலை 8 – 00 மணி முதல்  நாளை  காலை 8 – 00 மணி வரை  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.

வரவு செலவுத் திட்டத்தை கண்டிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளமை, அரச ஊழியர்கள் மேலதிகமாக செய்யும் தொழில்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை, இலவச மருத்துவ சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தனியார் துறையினரிடம் வைத்தியசாலைகள் கையளிக்கப்படவுள்ளமை போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி சிலாபம் பொது வைத்தியசாலை, புத்தளம் ஆதார வைத்தியசாலை, முந்தல், கல்பிட்டி மற்றும் ஆனமடு மாவட்ட வைத்தியசாலைகள், கொத்தாந்தீவு, உடப்பு, மாதம்பை மற்றும் லுனுவில் ஆகிய கிராமிய வைத்தியசாலைகள் மதுரங்குளி புழுதிவாயல் தப்போவ மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய மத்திய மருந்தங்களிலும் அவசர பிரிவைத் தவிர ஏனைய பிரிவுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நோயாளிகள் இன்று காலை சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த அதிகளவிலானவர்கள் கிசிச்சைப் பெறாமல் வீடு திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

doctors-protest-01 doctors-protest-02 doctors-protest-03 doctors-protest-04 doctors-protest-05 doctors-protest-06 doctors-protest-07 doctors-protest-08

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg