Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியுடனான தோல்வியின் எதிரொலி: புத்துணர்ச்சிக்காக டுபாய் செல்லும் இங்கிலாந்து வீரர்கள்

In கிாிக்கட்
Published: 11:45 GMT, Nov 30, 2016 |
0 Comments
1212
This post was written by : Anojkiyan
India England Cricket

இந்திய அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இங்கிலாந்து அணி, புத்துணர்ச்சிக்காக குடும்பத்தாரோடு 5 நாட்கள் டுபாயை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், 3 போட்டிகளில் இரு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள இங்கிலாந்து அணி, எஞ்சியுள்ள இரு போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனால், 4வது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 8ஆம் திகதி தொடங்குகிறது. இன்னமும் இரு வாரம் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்கள் டுபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இது குறித்து அணியின் தலைவர் அலைஸடர் குக் கூறுகையில்,

அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய எங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. டுபாயிலிருந்து புத்துணர்ச்சி பெற்று வருவோம். பெரும்பாலான வீரர்கள் டுபாய் செல்கிறோம். ஓய்வு பெற்றால் எங்களால் மேலும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறோம். என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg