Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் மாணவன் மீது தாக்குதல்: பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை

In இலங்கை
Updated: 12:22 GMT, Nov 30, 2016 | Published: 12:10 GMT, Nov 30, 2016 |
0 Comments
1238
This post was written by : Risha

பிரபல பாடசாலையொன்றின் மாணவன், இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வடக்கில் கடந்த சில காலங்களாக இவ்வாறான தாக்குதல் வன்முறைகள் தொடர்ந்து வந்த நிலையில், தற்போது சற்று அமைதியான சூழ்நிலை நிலவிவருகின்ற நிலையிலேயே இன்றைய தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரபல பாடசாலையின் மாணவரொருவர், பாடசாலை முடிந்து வெளியே வந்த சந்தர்ப்பத்தில் இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று குறித்த மாணவனை வாள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவன் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg