Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காத்தான்குடியில் பல்வேறு கடைகள் உடைத்து திருட்டு: சந்தேகநபர் கைது

In இலங்கை
Updated: 12:24 GMT, Nov 30, 2016 | Published: 12:23 GMT, Nov 30, 2016 |
0 Comments
1194
This post was written by : Risha

மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் பல கடைகளை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து தொலைத் தொடர்பு நிலையத்தில் களவாடப்பட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் கடந்த 24ஆம் திகதி மருந்துக் கடை, பலசரக்குக் கடை, தொலைத் தொடர்பு நிலையம், பாதணிக் கடை என்பன உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள், பணம் என்பன திருடப்பட்டு இருந்தன.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைபாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg