Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலிகளின் குரல் என்கிறார் அஸ்வர்

In இலங்கை
Updated: 15:27 GMT, Nov 30, 2016 | Published: 15:27 GMT, Nov 30, 2016 |
0 Comments
1857
This post was written by : Risha

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலிகளின் குரல் எனவும் அவர்களின் கோரிக்கைகள் புலிகளின் கோரிக்கைகள் எனவும் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் A.H.M அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்த அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலிகளின் குரல் என எழுதி இருக்கின்றார். எனவும் ”ஞானம்” என்ற புத்தகத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளின் குரலுக்கு ஏற்றது போலவே இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனவே இந்த அரசாங்கமும் புலிகளுக்கு ஏற்ற அரசியலமைப்பையே செயற்ப்படுத்த உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தமிழர்களுக்கு ஏற்றது என சம்பந்தன் கூறுகின்றார். அரசாங்கம் இன்னமும் அரசியலமைப்பை பார்க்க வில்லை என குறிப்பிடுகின்றது. இந்த நிலையில் இதில் எது உண்மை எனவும் கேள்வி எழுப்பினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg