Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னந் தோட்டத்தில் கேரளா கஞ்சா மீட்பு: சந்தேக நபர் தப்பியோட்டம்

In இலங்கை
Updated: 18:43 GMT, Nov 30, 2016 | Published: 18:43 GMT, Nov 30, 2016 |
0 Comments
1481
This post was written by : hoshika

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டக்குளி பிரதேசத்திலுள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 25 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம், புத்தளம் வலய விஷேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போது கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளா கஞ்சா தொகை மறைத்து வைக்கப்பட்டிருந்த காணியில் இருந்த நபர் ஒருவர் இந்த சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளார்.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg