Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: சென்னையை வீழ்த்தி கோவா ஆறுதல் வெற்றி

In உதைப்பந்தாட்டம்
Updated: 10:27 GMT, Dec 2, 2016 | Published: 10:27 GMT, Dec 2, 2016 |
0 Comments
1229
This post was written by : Elakkiya

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் சென்னையின் எவ்.சி அணியை எதிர்கொண்ட கோவா அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள மூன்றாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டி படோர்டாவில் நடைபெற்றது.

சென்னை மற்றும் கோவா அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன என்ற நிலையில் நேற்றைய போட்டியின் முடிவுபெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இரு அணி வீரர்களும் வெற்றிக்காகவே போராடினர்.

அதன்படி போட்டியில் 4 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் சார்பில் முதலாவது கோல் போடப்பட்டது. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கோவாவில் கோல் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணி சார்பிலும் 21 ஆவது நிமிடத்தில் கோவா அணி சார்பிலும் 28 ஆவது நிமிடத்தில் மீண்டும் சென்னை அணி சார்பிலும் கோல்கள் போடப்பட்டன. அதன்படி முதல்பாதி ஆட்டத்தில் 3:2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடியதால் களத்தில் அனல் பறந்தது. உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் விளையாடிய கோவா அணி 68 மற்றும் 76 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க 88 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை சென்னை அணி சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போட்டி 4:4: என்ற கோல் கணக்கில் சமநிலை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட கடைசி நிமிடங்களில் கோவா வீரர் சஹில் தவோரா சூப்பராக கோல் அடித்து அட்டகாசப்படுத்தினார்.

பரபரப்பான போட்டியின் இறுதியில் கோவா அணி 5-4 என்ற கோல் கணக்கில் சென்னையை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மொத்தம் 9 கோல்கள் அடிக்கப்பட்டன. ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல் எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg