Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவறிழைத்ததால் தொடரில் இருந்து வெளியேறினோம்: சென்னை பயிற்சியாளர்

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:45 GMT, Dec 2, 2016 | Published: 11:44 GMT, Dec 2, 2016 |
0 Comments
1439
This post was written by : Elakkiya

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் சில போட்டிகளில் தவறு செய்ததால் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சென்னையின் எவ்.சி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்றுவரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சம்பியனான சென்னையின் எவ்.சி அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கோவா அணியை எதிர்கொண்டு தோல்வியடைந்தது.

சென்னையில் இத்தகைய தோல்வி பயிற்சியாளர் மெட்டாரசியை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ சில போட்டிகளின் இறுதி தருணத்தில் எதிரணி வீரர்களுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பினை நாம் வழங்கிவிட்டோம். இதனால் சில புள்ளிகளை இழந்தோம். இது எங்களுடைய தவறு. இத்தகைய தவறுகளாலேயே தொடரில் இருந்து வெளியேறினோம்.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோவா அணியுடனான நேற்றைய போட்டியின் தோல்வி குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த போட்டியில் சமநிலை அல்லது வெற்றிபெறும் தகுதியுடன் இருந்தோம். ஆனால் தோற்றுவிட்டோம். களத்தில் எந்த வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர் என்று கூற முடியாது. ஆனால் நடுவர்கள் மோசமாக செயற்பட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg