Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சத்தான கொண்டை கடலை செலட்

In
Updated: 16:06 GMT, May 5, 2018 | Published: 07:27 GMT, May 4, 2018 |
0 Comments
1343
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டை கடலை – 1/4 கிலோ
கேரட் – 1
வெங்காயம் – 3
தக்காளி – 3
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
சாட் மசாலா (Chaat Masala) – 1 தேக்கரண்டி

செய்முறை

கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வெள்ளரிக்காய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், கொண்டை கடலை, உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரி, கொத்தமல்லி தழை, தக்காளி, சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். சுவையான சத்தான கொண்டை கடலை செலட் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg