Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மோசூலின் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள்

In உலகம்
Updated: 18:12 GMT, Dec 5, 2016 | Published: 06:39 GMT, Dec 5, 2016 |
0 Comments
1332
This post was written by : hoshika

கிழக்கு மோசூலின் ஐ.எஸ் தீவிரவாதிகளை வெளியேற்ற நிர்ப்பந்தித்து வரும் ஈராக்கிய சிறப்பு படையினர், அதில் சில பகுதிகளில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில், தொண்டு பணியாளர்கள்; ஈடுபட்டு வருகின்றனர்.

வரிசையில் காத்திருந்து நிவாரண உதவிகளை பெறும் மக்கள், அடுத்த வருடமாவது மோதல்கள் நிறைவுக்கு வருமா என்ற ஏக்கத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மோசூலில் தொடரும் தீவிர படை நடவடிக்கைகளால் எதிர்வரும் குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான குடிநீர், உணவு, உடை என்பவை குறித்து மக்கள் கலவலை கொண்டுள்ளனர். அதேபோல அவர்களுக்கு எவ்வாறு நிவாரண பொருட்களை வழங்குவது என்பது குறித்து நிவாரண பணியாளர்களும் ஆலோசித்து வருகின்றனர்.

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டை சரிய ஆரம்பித்திருக்கின்றது. இந்நிலையில், அவர்களின் முக்கிய இறுதி பிடிமானமாக விளங்கும் மோசூலை தக்க வைப்பதில் ஐ.எஸ் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

அதேவேளை மோசூலை கைப்பற்றும் உறுதியோடு அரச படையிகள் அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் தீவிர மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போர் களமாக மாறியுள்ள மோசூலுக்குள் சுமார் ஒரு மில்லியன் மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் மனிதக் கேடயங்களாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் போர் தந்திரோபாயங்களுக்கு பலியாகும் அப்பாவிப் பொதுமக்களை மீட்கும் திட்டங்களை, அரச படையினர் வகுத்து வருகின்றனர்.

அதேவேளை மோசூலில் இருந்து அரும்பாடுபட்டு வெளியேறி எர்பில் நகரை வந்தடையும் மக்கள் அகதி முகாமிற்குள் நுழைவதற்கு, அங்கு நிலவும் சீரற்ற காலநிலை தடையாக அமைந்துள்ளமை வேதனைக்குரிய விடயமே.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg