Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சரியான தருணம் இதுவே: அரசியலுக்கு முழுக்கு போட்டார் நியூஸிலாந்து பிரதமர்

In உலகம்
Updated: 18:25 GMT, Dec 5, 2016 | Published: 07:09 GMT, Dec 5, 2016 |
0 Comments
1417
icon_com
This post was written by : hoshika

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதோடு, அரசியல் விட்டு விலகும் காலம் வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் வெலிங்டனில் இன்று (திங்கட் கிழமை) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “எனது இந்த முடிவு கடினமானது தான் என்றாலும், இத்தருணத்தில் அது சரியானது என கருதுகிறேன். அடுத்து என்ன செய்வது என நான் யோசிக்கவில்லை.

இராஜினாமா செய்த பின்பு, எனது மனைவி புரோனாக் மற்றும் குழந்தைகள் ஸ்டெபானி, மாக்ஸ் ஆகியோருடன் பொழுதை கழிப்பேன். எனது இராஜினாமா முடிவை தனிப்பட்ட எனது குடும்ப வாழ்க்கைக்காக எடுத்தேன்” என்று தெரிவித்தார்.

தொழிலதிபராக இருந்த ஜான் கீ, 8 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2006ஆம் ஆண்டில் தேசிய கட்சியின் தலைவரானார். பின்னர் 2008ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, இவர் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரதமர் பதவியை மட்டுமன்றி, தேசிய கட்சி தலைவர் பதவியையும் இராஜினாமா செய்வதாக கீ அறிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி தேசிய கட்சி ஒன்றுகூடி, புதிய தலைவர் மற்றும் பிரதமரை தெரிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இப்பதவிகளுக்கு துணை பிரதமர் பில் இங்கிலீஷ் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg