Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இட்லிப்பில் விமானத் தாக்குதல்: குறைந்தது 21 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 07:57 GMT, Dec 5, 2016 | Published: 07:57 GMT, Dec 5, 2016 |
0 Comments
1730
This post was written by : hoshika

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமைந்துள்ள காஃப்ர் நப்ல் நகரத்தின் கிராமமொன்றில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில், குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்லப்பட்டவர்களில் இரண்டு பெண்களும், மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தாக்குதல்கள் ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ரஷ்ய போர் விமானங்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்குப் பின்னரான அப்பகுதியின் நிலையை காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதில் ஒரு காணொயில் சிவில் பாதுகாப்பு மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்டோரை மீட்பதும், மக்கள் சிதறி ஓடுவதும் காட்டப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒருவர், “வீடுகள் மற்றும் பேக்கரி மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன்போது பலர் உயிரிழந்ததோடு, பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர். அவர்களை எங்களால் கணக்கிட முடியவில்லை. சிவில் பாதுகாப்ப மீட்பு குழுவினர் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டார்.

மற்றுமொரு காணொளியில், தாக்குதலில் தரைமட்டமாகியுள்ள வீடும், அதற்குள் உயிரிழந்த நிலையில் ஆணொருவரும், குழந்தையொன்றும் காணப்படுவதும் பதிவாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg