Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய அரசு கருணையுடன் செயற்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்து

In
Updated: 06:03 GMT, Dec 11, 2016 | Published: 06:03 GMT, Dec 11, 2016 |
0 Comments
1244
This post was written by : Risha

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரில் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆதரவு படைகள் தீவிர மோதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சிரிய அரசாங்கமும், ரஷ்ய ஆதரவு படைகளும் சற்று கருணையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சிரியாவின் எதிரணியை ஆதரிக்கும் அரசுகளுக்கு இடையிலான கூட்டமொன்று பாரிஸில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் நகரிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியேறி வருகின்றது. ஆனால் இவ்வாறு வெளியேறுவோரும் போதும் பாதுகாப்பற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது.

எனவே அலெப்போவின் மோதல் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மாத்திரம் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிரியாவின் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காண முடியாது. எனவே அரசியல் ரீதியிலான தீர்வொன்றை பெறும் நோக்கில் நாம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜொன்சன் குறிப்பிட்டுள்ளார்.

பரிஸில் இடம்பெற்ற சிரியாவின் எதிரணியை ஆதரிக்கும் அரசுகளுக்கு இடையிலான கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில அரபு நாடுகள் என்பன கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg