Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் அதிகாரிகள் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்: இங்கிலாந்து

In
Updated: 07:49 GMT, Dec 15, 2016 | Published: 07:49 GMT, Dec 15, 2016 |
0 Comments
1234
icon_com
This post was written by : Elakkiya
_86662546_000226873-1-1

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அடுத்த ஆண்டுமுதல் புதிதாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று பொலிஸ் கல்லூரி அறிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள அதிகாரிகள் நிதிப்பங்களிப்பு செய்யப்பட்ட முதுகலை கற்கை நெறிகளை தொடரமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சேர்ப்புக்கான தகுதிகள் ஒவ்வொரு பிரிவுகளுக்கு மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. சில விண்ணப்பதாரிகளுக்கு உயர்தரம் முடித்திருக்க வேண்டும் அல்லது பொலிஸ் பயிற்சியில் சான்றிதழுடன் அனுபவம் தேவை என்று ஆட்சேர்ப்புக்கான தகுதிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் பொலிஸ் சேவை நெறிமுறைகள் மற்றும் பயிற்சித் தரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு வாய்ந்த பொலிஸ் கல்லூரி, தற்போது பொலிஸ் அதிகாரிகளான பணியாற்றுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களாகவோ அல்லது முதுகலை படிப்புக்கு தகுதி பெற்றவர்களாகவோ உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg