Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு

In
Updated: 05:41 GMT, Dec 18, 2016 | Published: 05:41 GMT, Dec 18, 2016 |
0 Comments
1283
This post was written by : hoshika

கிழக்கு இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இராணுவ விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில், 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பப்புவா மாகாணத்தின் ரிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ‘ஹெர்குலஸ் சி-130’ (Hercules C-130  ) விமானம், மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது.

குறித்த விமானத்தில் 3 விமானிகளும், 10 இராணுவ வீரர்களும் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் இவ்விபத்தில் உயிரிழந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை கடந்த வருடம் ஜுலை மாதம்இராணுவ விமானமொன்று மெடான் பகுதியில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்திற்கு உள்ளானதில், அதில் பயணித்த 12 விமானப் பணியாளர்களும், 109 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg