Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூரிச் இஸ்லாமிய மையத்தில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் சடலமாக கண்டெடுப்பு

In ஐரோப்பா
Updated: 04:59 GMT, Dec 21, 2016 | Published: 04:59 GMT, Dec 21, 2016 |
0 Comments
1444
This post was written by : Elakkiya

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் நிதித்தலைநகரான சூரிச்சில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சோமாலி இஸ்லாமிய மையத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இஸ்லாமிய மையத்திலிருந்து சிறிது தூரத்தில் பாலம் ஒன்றில் கீழ் சந்தேகநபரில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தின் அருகில் துப்பாக்கி ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த நபரே தாக்குதல்தாரி என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார் அவர் சுவிட்ஸர்லாந்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த நபருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் எதற்காக இஸ்லாமிய மையத்தில் தாக்குதல் நடத்தினார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்க சூரிச் நகரிலிருந்து வடகிழக்கு பகுதியில் ஞாயிறன்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் சந்தேகநபரின் டி.என்.ஏ பொருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg