Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 05:26 GMT, Dec 22, 2016 | Published: 05:26 GMT, Dec 22, 2016 |
0 Comments
1258
This post was written by : Risha

நிரந்தர நியமனம் கோரி வடமாகாணத்தில் கடமை நிறைவேற்றும் அதிபர்களாக நியமிக்கப்பட்ட அதிபர்கள், இன்று (வியாழக்கிழமை) வடமாகாண சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடமை நிறைவேற்றும் அதிபர்களாக செயற்படும் தம்மை மத்திய அரசின் மூலம் நிரந்தர அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வழமையாக நியமிக்கப்பட்ட அதிபர்கள், சேவை மூப்பின் அடிப்படையில் நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவதே இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிபர் சேவை பிரமாணத்திற்கு அமைய போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு புதிய அதிபர் சேவை நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கடமை நிறைவேற்றும் அதிபர்களாக கடமையாற்றிய அதிபர்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்கள் கடமை நிறைவேற்றும் அதிபர்களுக்கு பாதிப்பில்லாத வகையில், வெற்றிடம் உள்ள பாடசாலைகளில் புதிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் மாறாக கடமை நிறைவேற்றும் அதிபர்களை நீக்க எடுக்கும் முயற்சி வேதனையளிக்கிறது என்றும் குறிப்பிட்டனர்.

ja4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg