Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழ அகதி ஆர்வலர் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரை காவு கொண்ட தீ விபத்து

In உலகம்
Updated: 10:47 GMT, Dec 22, 2016 | Published: 10:47 GMT, Dec 22, 2016 |
0 Comments
2000
This post was written by : hoshika

ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் தீ விபத்தில் உயிரிழந்த பரிதாப சம்பவம், நியூஸிலாந்தின் தென் ஆக்லாந்து பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் நியூஸிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஷ் தனபாலசிங்கம் அவர்களின் குடும்பத்தினரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்போது கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைலேஷ் தனபாலசிங்கம், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது.

கைலேஷின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, அவரின் 11 வயதுடைய மகள் மற்றும் 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கைலேஷின் குடும்ப நண்பர் சிவராம் ஆனந்தசிவம், “இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளது. அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அபத்தம், இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் இனக்குழுமங்களுக்கு பேரதிர்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்தின் அகதிகள் பேரவையின் நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றும் கைலேஷ்; தனபாலசிங்கம், நியூசிலாந்தில் குடியேறும் மக்களுக்கு உயர்ந்த சேவையை வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg