Chrome Badge

கடும் காற்று வீசக்கூடும்: பொருட் கொள்முதலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

In
Updated: 10:36 GMT, Dec 23, 2016 | Published: 10:36 GMT, Dec 23, 2016 |
0 Comments
1037
_93103336_gettyimages-461264502

பிரித்தானியாவின் வேல்ஸ், பார்பரா பகுதியில் கடும்காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி கடைகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காற்றானது மணிக்கு 70 மைல் வேகத்தில் தாக்கும் எனவும் எதிர்கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய, அதிகாரிகள் மக்கள் விழிப்புடன் இருப்பதற்கு வேண்டிய மஞ்சள் எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணியில் இருந்து குறித்த மஞ்சள் எச்சரிக்கை அமுலுக்கு வரும் எனவும் நியம நேரத்தின் பிரகாரம் இரவு 7 மணியளவில் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரண்டு பாலங்களில் வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், படகு சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறான போதும், கிறிஸ்மஸ் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை தினமே அதிக அளவில் விற்பனை இடம்பெறும் தினம் என்பதால் இன்று வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தன. இருந்த போதிலும், இந்த எச்சரிக்கை காரணமாக அவை சோபை இழந்துவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)