Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்பரா சூறாவளி: இன்றும் தொடரும் அபாயம்

In
Updated: 08:54 GMT, Dec 24, 2016 | Published: 08:54 GMT, Dec 24, 2016 |
0 Comments
1264
icon_com
This post was written by : Sambavi
_93115080_ferry

பிரித்தானியாவின் வேல்ஸ்ஸில் பார்பரா கடும்காற்று வீசும் அபாயம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் இன்றும் காற்று பலமாக வீசும் என்பதனால் ரயில், படகு பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிகாரிகள் மக்கள் விழிப்புடன் இருப்பதற்கு வேண்டிய மஞ்சள் எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணியில் இருந்து குறித்த மஞ்சள் எச்சரிக்கை அமுலுக்கு வந்துள்ள நிலையில், காற்றானது பொக்ஸிங் தினம் என கொண்டாடப்படும் 26ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

இதேவேளை, வேறு சில பகுதிகளில் கொனோர் சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 90மைல் வேகத்தில் வீசக்கூடும் என்ற எதிர்கூறுலும் காணப்படுவதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய எச்சரிக்கையாவதற்கும் தயாராவதற்கும் என மக்களுக்கு அடுத்தடுத்து இரு வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் மக்கள் அவதானமாக இருக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg