Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

உகண்டாவில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் நீரில் மூழ்கினர்: 9 சடலங்கள் கண்டுபிடிப்பு

In
Updated: 09:48 GMT, Dec 27, 2016 | Published: 06:07 GMT, Dec 27, 2016 |
0 Comments
1276
This post was written by : hoshika
8

ஆபிரிக்க நாடான உகண்டாவின் அல்பேர்ட் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, காணாமல் போன 21 பேரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உகண்டாவின் புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் கால்பந்து அணியினர் மற்றும் அவர்களின் ரசிகர்கள், கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஹொய்மா மாவட்டம் ரங்காவில் நடைபெற இருந்த போட்டியில் பங்கேற்பதற்காக அல்பேர்ட் ஏரியூடாக படகில் சென்று கொண்டிருந்தனர்.

சிறு படகில் 45 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் டிரம்ஸ் போன்ற இசைக்கருவி இசைத்து ஆடி பாடி சென்றதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் எதிர்பாரராத விதமாக படகு கவிழ்ந்ததில் 30 பேர் நீரில் மூழ்கியதோடு, ஏனைய 15 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த ஏரியில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போன ஏனையோரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்ற நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் இதே ஏரியில், படகுகொன்று மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

8-1

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner