Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத கனமழை: ஆறு பேரை காணவில்லை

In
Published: 11:54 GMT, Dec 27, 2016 |
0 Comments
1275
icon_com
This post was written by : hoshika
19

அவுஸ்திரேலியாவின் உலுரு (Uluru) பிராந்தியத்தில் அமைந்துள்ள தேசிய பூங்கா பகுதியில் கிடைக்கப்பெற்ற வரலாறு காணாத கனமழையினால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் ஹெலிக்கொப்டர்களின் உதவியுடன் முழு வீச்சில் இடம்பெற்று வருவதுடன், தேசிய பூங்காவை அண்டி வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினமான கிறிஸ்மஸ் தினத்தன்று குறித்த ஆறு பேரும் காணாமல் போயுள்ளதுடன், இவர்களில கைக்குழந்தையும் உள்ளடங்குவதாக பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் குறித்த பகுதியில் இந்த பருவத்தில் கனமழை கிடைக்கப் பெறுவதுடன், அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றமையும் வழமையாகும். ஆயினும் இவ்வருடத்தில் வழமையை விட அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg