Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்: திருகோணமலையில் சம்பவம்

In
Published: 18:02 GMT, Dec 27, 2016 |
0 Comments
2885

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் முச்சக்கரண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் திருகோணமலை உட்துறைமுக வீதி கிழக்கு மாகாண சபை கட்டிட பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தம்பலகாமம் பகுதில் கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அதிவேக போக்குவரத்து பொலிஸாரால் முச்சக்கரவண்டி ஒன்று பின் தொடரப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தாமல் செல்ல பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் குறித்த முச்சக்கரவண்டியை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்பு தொடர்ச்சியாக முச்சக்கரவண்டி நிறுத்தாமல் செல்ல பின்தொடர்ந்த பொலிஸார் குறித்த முச்சக்கரவண்டியை திருகோணமலை உட்துறைமுக பகுதியில் வைத்து சுற்றிவளைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)