Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோரிக்கைள் மறுக்கப்படுமாயின் வழிகாட்டல் குழுவிலிருந்து சம்பந்தன் விலக வேண்டும்: சுரேஸ்

In இலங்கை
Updated: 08:30 GMT, Dec 28, 2016 | Published: 08:30 GMT, Dec 28, 2016 |
0 Comments
1333
This post was written by : Varshini

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் எனக் குறிப்பிட்டு தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு குறித்த வழிகாட்டல் குழுவில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உடனடியாக வெளியேற வேண்டுமென கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், வழிகாட்டல் குழுவில் இருக்கும் சம்பந்தனும் சுமந்திரனும் இதுகுறித்து ஏன் பேசவில்லையெனவும் சுரேஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, இரா.சம்பந்தன் போன்ற தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது, கொடுத்து வைத்த விடயமென தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், அவரது காலத்திலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது அவசியமென மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg