Chrome Badge

தெற்கு லண்டனில் இளைஞர் மீது மோசமான தாக்குதல்

In
Published: 05:43 GMT, Dec 29, 2016 |
0 Comments
1040
mediaitem

தெற்கு லண்டன் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன் மீது நேற்று முன்தினம் இரவு கார் மோதியுள்ளதுடன், பின்னர் அவன் மீது கத்துக்குத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்களால் கடுமையான காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன் தெற்கு லண்டன் வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளான்.

Brixton இன் Rushcroft வீதியினூடாக சென்று கொண்டிருக்கும் போதே கபில நிற கார் இளைஞன் மீது மோதியதாக ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் பங்குபெறும் களியாட்ட நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய தகவல் அறிந்தால் தமக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)