Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலியாவில் 10 மாதங்களில் பெருந்தொகை கொக்கெயின் போதைப் பொருள் பறிமுதல்

In
Published: 07:20 GMT, Dec 29, 2016 |
0 Comments
1219
icon_com
This post was written by : hoshika

கடந்த 10 மாதங்களுக்குள் 259 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய கொக்கெயின் போதைப் பொருளை தாம் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார், இது தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தலைநகர் சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட, அவுஸ்திரேலிய மத்திய பொலிஸ் பதில் உதவி ஆணையாளர் Chris Sheehan இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களின் தொகை, அவுஸ்திரேலிய வரலாற்றில பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள்களின் முதல் 10 இடங்களுக்குள் அடங்குகின்றன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் மாத்திரம் 1.1 தொன் கொக்கெயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று சிட்னியின் வடக்கு பகுதியில் உள்ள Brooklyn கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரவு நேர தேடுதல் நடவடிக்கையின் போது, 500 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல கடந்த மார்ச் மாதம் Tahiti பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 600 கிலோகிராம் கொக்கெயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg