Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

லண்டனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பாதுகாப்பு அதிகரிப்பு

In
Published: 07:55 GMT, Dec 31, 2016 |
0 Comments
1299
icon_com
This post was written by : Sylviya
10-1

உலக நாடுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2017 ஆம் ஆண்டை வரவேற்கத்  தயாராகியுள்ள நிலையில், லண்டனிலும் பல கொண்டாட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு முழு லண்டனும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

குறித்த கொண்டாட்டங்களுக்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருவது வழமையாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடத்தப்படும் வானவேடிக்கையை பார்வையிடும் பொருட்டு சுமார் 100,000 டிக்கெட்டுக்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெருந்திரளான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

லண்டனை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு குறிப்பிட்ட சில வாகனங்கள் செலுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாகவும், சுமார் 3000 பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 19 ஆம் திகதி பேர்லின் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டே குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிரேட் மன்செஸ்டர் பொலிஸார் கருத்து தெரிவித்துள்ளனர்.

10-2
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg