Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புத்தாண்டை உவகையுடன் வரவேற்ற லண்டன் மக்கள்

In
Published: 00:43 GMT, Jan 1, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : S.K.Guna

லண்டன், வெஸ்ட் மின்ஸ்ரர் தேம்ஸ் நதிக்கரையோரமாக ஒன்று கூடிய மக்கள் புதிய ஆண்டான 2017 ஐ கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

லண்டன் ஐ மற்றும் தேம்ஸ் நதியில் மிதக்கும் சிறிய கப்பல்களில் இருந்து வாண வேடிக்கை புது வருடம் பிறந்த நேரத்தில் இருந்து 12 நிமிடங்களுக்கு நடைபெற்றது.

லண்டன் பெருநகருக்கு அழகு சேர்க்கும் தேம்ஸ் நதிக்கருகே கண்கவர் வாணவேடிக்கையை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர். மக்களை கட்டுப்படுத்துமுகமாக இதனை பார்வையிட நுழைவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

புதுவருட கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரித்தானியாவின் பல பகுதிகளில் இருந்தும் லண்டனுக்கு மக்கள் திரண்டு வருவது வழமையானதாகும். எனினும் ஐரோப்பிய நகரங்களில் மக்கள் ஒன்றுகூடும் பகுதிகளை இலக்கு வைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதால் லண்டனில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் லண்டன் நகர வீதிகள் சில மூடப்பட்டு வாகனப் போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

fireworks-1  fireworks-3 fireworks-4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg