Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கால்பந்து கழக அணிக்கு மறுப்பு தெரிவித்த ரொனால்டோ!

In
Published: 07:26 GMT, Jan 1, 2017 |
0 Comments
1112
rona

போர்த்துக்கல் அணியின் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சீன கால்பந்து கழக அணியொன்று 300 மில்லியன் யூரோவுக்கு வாங்க அணுகியதாக ரொனால்டோவின் முகவர் ஜோர்ஜ் மென்டேஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டுபாயில் நடைபெற்ற கால்பந்து விருது வழங்கும் விழாவிலேயே அவர் குறித்த தகவலை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்த பணம் பெரிய விஷயம் இல்லை. ரியல் மெட்ரிட் அணிதான் அவரது வாழ்க்கை. ரியல் மெட்ரிட் அணியில் அவர் சந்தோசமாக இருக்கிறார். சீனாவிற்கு செல்வது நடக்காத விஷயம்” என கூறினார்.

இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட் கழக அணியில் 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை இடம்பிடித்திருத்த ரொனால்டோ, அதன்பின் ஸ்பெயின் நாட்டின் ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)