Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

புருண்டியின் சுற்றுச் சூழல் அமைச்சர் சுட்டுக்கொலை

In
Updated: 08:30 GMT, Jan 1, 2017 | Published: 07:28 GMT, Jan 1, 2017 |
0 Comments
1072
buru-mmap-md

புருண்டி நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் இம்மானுவேல் நியோன்குரு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிழக்காபிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள புருண்டி நாட்டில் நீண்ட காலமாக அரசியல் குழப்பம் நிலவிவருகின்றது. இந்த நிலையில், அங்கு படுகொலைகள் என்பன அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன.

இத்தனைய நிலையிலேயே சுற்றுச்சூழல் அமைச்சர் இம்மானுவேல் நியோன்குரு இன்று அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

புருண்டி நாட்டின் தலைநகரான புஜும்புராவில் அமைச்சர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான நிலைமை தோற்றும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.