Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெஸ்சியை விட ரொனால்டோ சிறந்தவர்: கோஹ்லி

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:06 GMT, Jan 2, 2017 | Published: 04:14 GMT, Jan 2, 2017 |
0 Comments
1304
This post was written by : Anojkiyan

கால்பந்து உலகில் ஜாம்பவானாக திகழும் அர்ஜென்டினா அணியின் லயனல் மெஸ்சியை விட போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோ சிறந்தவர் என இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடமிருந்து ஏராளமான வகையில் உத்வேகம் பெற்றுள்ளேன். கடின உழைப்பினால் அவர் பல வருடங்களாக முதல் இடத்தில் உள்ளார். உலகிலேயே மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர் ரொனால்டோதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்தான் அவர் அந்த இடத்தில் இருக்கிறார். மெஸ்சி ஒரு சிறந்த மேதை. ஆனால், கடின உழைப்பில் ரொனால்டோ அவரை விடச் சிறந்தவர்.” என கூறினார்.

சமீபகாலமாக கிரிக்கெட் அரங்கில் ஜொலித்துவரும் விராட் கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதையும் தாண்டி சிறந்த அணிதலைவர் என்பதையும் நிரூபித்துவிட்டார்.

முன்னாள் அணிதலைவர் டோனி டெஸ்ட் அரங்கில் இருந்து ஒய்வு பெற்றுக்கொண்டதையடுத்து இந்திய டெஸ்ட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி தற்போது டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை முதலிடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg