Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலூன் துண்டுள் சுவாசக் குழாயில் இறுகி சிறுவன் மரணம்: ஏறாவூரில் சம்பவம்

In இலங்கை
Updated: 16:05 GMT, Jan 2, 2017 | Published: 16:05 GMT, Jan 2, 2017 |
0 Comments
1974
This post was written by : Surenth

பலூன் வெடித்துச் சிதறி  சுவாசக் குழாயில்  அடைத்ததாதால் சிறுவன் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பகுதி தேவாலயத்தில் பலூன் ஊதி விளையாடிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தான். சம்பவம் தொடர்பான உடற் கூற்றுப் பரிசோதனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

குறித்த சிறுவன் ஊதிய வெடித்துச் சிதறி  பலூனின் இறப்பர் துண்டுகள் சிறுவனின் சுவாசக் குழாயை இறுக அடைத்துக் கொண்டதால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மரணித்துள்ளான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி (Consultant Judicial Medical Officer) ஸ்ரீராம் ஜெயக்கொடி மேற்கொண்ட உடற் கூற்றுப் பரிசோதனையின் மூலம் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்  பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இதன் போது, பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்த 11 வயது  தயாகரன் மதுஷான் என்ற சிறுவன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் திடீரென மயங்கி விழுந்து மர்மமாக மரணித்திருந்தான்.

உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உடற் கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது. இதன் போது சிறுவனின் மர்ம மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

batticaloa-child-death-news-01 batticaloa-child-death-news-02 batticaloa-child-death-news-03 batticaloa-child-death-news-04

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg