Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாரச் சந்தை இடமாற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 04:55 GMT, Jan 3, 2017 | Published: 04:55 GMT, Jan 3, 2017 |
0 Comments
1280
This post was written by : Varshini

முல்லைத்தீவு மாவட்டம் நீராவிப்பிட்டிய பகுதியிலுள்ள வாரச் சந்தையை இடமாற்றம் செய்வதற்கு எதிராக பிரதேச வியாபாரிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

உள்ளுர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கென ஆரம்பிக்கப்பட்ட இச்சந்தையில் தற்போது பெருமளவு வெளிமாவட்ட வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதால் பொதுச்சந்தை வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, இச்சந்தையினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின் மாற்றுவதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேரில் சென்று நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg