Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பில் வடக்கு – கிழக்கு இணைக்கப்படும் வாய்ப்பு:- கலாநிதி ந.குமரகுருபரன்

In இலங்கை
Updated: 06:16 GMT, Jan 4, 2017 | Published: 06:16 GMT, Jan 4, 2017 |
0 Comments
1272
This post was written by : srikkanth

புதிய அரசியலமைப்பில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு முஸ்லீம் மக்களுக்கு தனியான அலகு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக கலாநிதி ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

ஆதவன் தொலைக் காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் அமைப்பின் மூலம் தற்போதுள்ள 9 மாகாணங்களில் சில ஒன்றிணைக்கப்பட்டு மொத்தமாக 5 மாகாணங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தின் ஒருபகுதி தவிர்ந்த வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாணமாக உருவாக்கப்படுவதுடன் அதில் ஒருபகுதி முஸ்லீம்களுக்கான தனியலாக வரையறுக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg