Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட மதுபானம், மாங்குளம் பொலிஸாரால் மீட்பு

In
Updated: 16:30 GMT, Jan 4, 2017 | Published: 07:09 GMT, Jan 4, 2017 |
0 Comments
1071
This post was written by : Varshini

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராய போத்தல்களுடன் மாங்குளத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச முத்திரை பொறிக்கப்பட்ட, 750 மில்லிலீற்றர் அளவுடைய 84 போத்தல் தென்னஞ்சாராயமும் 180 மில்லிலீற்றர் அளவுடைய 64 போத்தல் தென்னஞ்சாராயமும் வேறு வகையான மதுபான போத்தல்கள் சிலவுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாகனமொன்றை மறித்து சோதனையிட்டபோது குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner