Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பவேரியா காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது

In
Published: 08:30 GMT, Jan 4, 2017 |
0 Comments
1151
This post was written by : Elakkiya

ஜேர்மன் தெற்கு பவேரியா மலைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினை மூன்று நாட்கள் போராட்டத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களுடன் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்ட தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அல்ப்ஸ் மலைத்தொடருக்கு அண்டிய பிராந்தியத்தில் இந்த காட்டுத் தீயானது ஏற்பட்டது. இதில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவிக்கையில், ‘ கட்டுப்பாட்டை மீறி எரிந்த இந்த காட்டுத்தீயினால் சுமார் 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பாகும்.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு வெகுவாக போராடியதாகவும் ஏழு ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிராந்தியத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயாக இது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner