Chrome Badge
Athavan News

சதேர்ன் ரயில் சாரதிகள் 10 ,11,13 ஆம் திகதிகளில் மீண்டும் வேலைநிறுத்தம்

In
Updated: 13:10 GMT, Jan 4, 2017 | Published: 13:03 GMT, Jan 4, 2017 |
0 Comments
1181
southern-strike

சதேர்ன் ரயில் சாரதிகள் 6 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் தொடங்கவுள்ளது.

முதல் கட்டமாக 3 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் தொடர்ந்துவரும் காலங்களிலும் இந்த வேலைநிறுத்தம் தொடருமென ASLEF தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தமானது இம்மாதம் 10 ,11 மற்றும் 13 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை ஜனவரி 24 ,25 ,26 ஆம் திகதிகளில் மீண்டும் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தினால் எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லையென்றும் மாறாக பயணிகளுக்கு கஷ்டங்களும் இடையூறுகளுமே உண்டாகும் என ரயில் யூனியன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சாரதிகள் மேற்கொள்ளவுள்ள வேலைநிறுத்தத்தினால் 300,000 பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)