Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டி: நான்காவது முறையாகவும் வாகை சூடியது இந்திய அணி

In
Published: 04:51 GMT, Jan 5, 2017 |
0 Comments
1125
This post was written by : Anojkiyan
i-1

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான சம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சம்பியனான இந்திய மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று (புதன்கிழமை) மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் இடம்பெற்ற இப்போட்டியில், இந்திய மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.

இதில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள், 3-1 என்ற கோல்கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றனர். இதன்மூலம் தெற்காசிய கால்பந்து கோப்பையை இந்திய மகளிர் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வென்றுள்ளது.