Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலியாவில் நுளம்புகளால் ஏற்படும் வைரஸ்கள் குறித்து எச்சரிக்கை

In
Updated: 10:46 GMT, Jan 5, 2017 | Published: 10:46 GMT, Jan 5, 2017 |
0 Comments
1072
_93257373_a2c49b04-f597-4dd7-ac96-60344acdf260

நுளம்புகளால் ஏற்படும் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து அவுஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விக்டோரியா மாநிலத்தின் பிரதான சுகாதார அதிகாரி சார்லஸ், தெரிவிக்கையில், ‘விக்டோரியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் Ross River வைரஸ் தாக்கத்தினால் 341 பேர்; பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கையானது 2015 ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க அண்மைய காலங்களில் ஏற்பட்ட கடும்மழை காரணமாக தேங்கி நிற்கும் நீரில் இருந்து நுளம்புகள் அதிகளவில் பெருக்கம் அடைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இத்தகைய வைரஸ்கள், அவுஸ்திரேலியா மற்றும் சில பசுபிக் நாடுகளில் வெகுவாக பரவுவதாகவும் மூட்டுவலி, சோர்வு, மற்றும் தசைவலிகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.