Chrome Badge

இந்த மண்ணில் பிறந்திருந்தால் நானும் உங்களைப் போன்றே செயற்பட்டிருப்பேன்:- கிளி. பொலிஸ் அத்தியட்சகர்

In
Published: 16:28 GMT, Jan 5, 2017 |
0 Comments
9554

இந்த மண்ணில் பிறந்திருந்தால்  நானும் உங்களைப் போன்றே செயற்பட்டிருப்பேன் என கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொஷான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைக்கும் பணியில் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதுதொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட பிரதேச வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் அங்கு கூடியிருந்தவர்களுடன் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடாந்தும் கருத்து தெரிவிக்கையில், “துன்பங்களையும் இழப்புக்களையும் அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலி புரியும். இந்த இடத்தில் பிறந்திருந்தால் நானும் உங்ளை போன்றே செயற்பட்டிருப்பேன். ஆனால், ஒரு பொலிஸ் அதிகாரியாக நாட்டில் சட்ட ஒழுங்கை பேண வேண்டிய கடப்பாடு இப்போது எனக்கு இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)