Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

‘சார்ளி கெப்டோ’ மீதான தாக்குதல்: நாளையுடன் இரண்டு வருடங்கள்

In
Published: 05:55 GMT, Jan 6, 2017 |
0 Comments
1108
This post was written by : Sambavi

பிரான்ஸின் உலகப்புகழ் பெற்ற சஞ்சிகையான ‘சார்ளி கெப்டோ’ தலைமைக் காரியாலயம் தீவிரவாதிகளால் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு நாளையுடன் (சனிக்கிழமை) இரண்டு வருடங்கள் நிறைவடைய உள்ளது.

தீவிரவாதத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் தீவிரவாதிகள் மேற்கொண்ட கொடூரமான இந்தத் தாக்குதல் இன்றும் பரிஸ் மக்களாலும் உலகத்தாலும் மறக்கமுடியாத ஒன்றாக காணப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி இடம்பெற்ற இத் தாக்குதலின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் பரிஸ், நகர மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) விஷேட நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று முகமூடியணிந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் சார்ளி கெப்டோ நிறுவனத்திற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர். அதில் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.

இதேவேளை, இத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்கள் கடந்த நிலையில், மற்றுமொரு பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், பல்பொருள் அங்காடி ஒன்றில் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்ட நான்கு பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள் மீதான மிக மோசமான அத்துமீறலாக ‘சார்ளி கொப்டோ’ சஞ்சிகை நிறுவனத்தின் மீதான இத் தாக்குதல் அமைந்துள்ளதுடன், இதன் காரணமாக பல உலக நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான படை நடவடிக்கைகளில் ஒன்று திரண்டனர் என்பதும் நோக்கத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner